இஸ்ரேலை பழிக்குப்பழி வாங்குவோம்: ஈரான் உயர் தலைவர் கமேனி சபதம்/Iran supreme leader Khamenei vows revenge against Israel

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.நேற்று ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது.இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.காசா மீதான தாக்குதலுக்குப்பின் ஒருமுறை ஈரான் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஈரான் கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அப்போது அமெரிக்கா உதவியுடன் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரான் தாக்குதலை முறியடித்தது.தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.
மூலக்கதை
