heat increased in chennai today people suffer / சென்னைவாசிகளை இன்று வாட்டி வதைத்த கடும் வெயில்

  மாலை மலர்
heat increased in chennai today people suffer / சென்னைவாசிகளை இன்று வாட்டி வதைத்த கடும் வெயில்

சென்னை:தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.பொதுவாக மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது. சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று பகலில் சுட்டெரித்த வெயில் தாக்கியது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.அதே போல இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்குவதுபோல இன்று தாக்கியது. காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கோடை காலத்தில் உஷ்ணம் இருப்பது போல சென்னைவாசிகள் பகலில் வெயிலின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-"மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டி மேகங்கள் சூழ்ந்து மழைப் பொழிவை கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருப்பதற்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணமாகும்.மேகக்கூட்டங்கள் இல்லை. மேகக்கூட்டங்கள் உருவாகினால் மழைக்கான வாய்ப்பு ஏற்படும். மேகக்கூட்டங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது இந்த சீசனில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல" என்றார்.

மூலக்கதை