நிலக்கடலை ஒவ்வாமையை நீக்கும் சிகிச்சை அறிமுகம்

  தமிழ் முரசு
நிலக்கடலை ஒவ்வாமையை நீக்கும் சிகிச்சை அறிமுகம்

நிலக்கடலையால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு, நாடு தழுவிய உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் திட்டம் ஒன்றை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிர்ப்புத் திறனை அதிகரிக்க, இரண்டு ஆண்டுகளுக்கு நிலக்கடலைப் பொடி டோஸ் தினசரி வழங்கப்படும் என்று ஜூலை 31 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.நாளடைவில் 10 குழந்தைகள் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் மேற்பார்வையில், குழந்தைகளுக்கு ஒவ்வாமையைக் குறைக்கும் வகையில் நிலக்கடலைப் பொடி வழங்கும் அளவு அதிகரிக்கப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, உணவு ஒவ்வாமை பரிசோதனை சிகிச்சையானது நோய் தீர வழிவகுத்ததா என்பது கண்டறியப்படும்.“இந்தச் சிகிச்சையின்வழி ஆஸ்திரேலியாவில் ஒவ்வாமை நோயின் தாக்கத்தை மாற்ற விரும்புகிறோம். இதனால் அதிகமான குழந்தைகள் நிலக்கடலையால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை தாக்கமின்றிப் பள்ளிக்குச் செல்ல முடியும்” என்று திருமதி கெர்ஸ்டன் பெரெட் கூறினார்.ஆஸ்திரேலியாவில் நிலக்கடலை ஒவ்வாமையால் பாதிக்கப்படுவோரில் 2 மாத குழந்தைகள் மூன்று விழுக்காட்டினர் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பதின்ம வயதை அடையும்போது ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீள்கின்றனர். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் மேற்கூறப்பட்ட சிகிச்சை முறை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும்.ஆஸ்திரேலியாவில் வேர்க்கடலை ஒவ்வாமையால் ஏற்படும் இறப்புகள் அரிதானவை. ஆனால், கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு மக்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆஸ்திரேலியாவின் முன்னணி ஒவ்வாமை நிறுவனத்தின் தரவுகள் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டில் 70 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை