கடற்கரையில் பெருந்திரளாகப் பறந்த தும்பிகள்; மக்கள் அதிர்ச்சி

  தமிழ் முரசு
கடற்கரையில் பெருந்திரளாகப் பறந்த தும்பிகள்; மக்கள் அதிர்ச்சி

வாரயிறுதியில் ரோட் தீவில் உள்ள கடற்கரைக்குச் சென்றவர்கள் பேரதிர்ச்சி தரும் காட்சியால் திகைத்தனர். வானத்தில் திரளாகத் தும்பிகள் ( தட்டான் பூச்சிகள் ) பறந்ததே அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளில், அமெரிக்காவில் உள்ள மிஸ்குவாமிகட் ஸ்டேட் பீச் மற்றும் சவுத் ஷோர் பீச் ஆகிய இடங்களில் தும்பிகள் திரளாகப் பறப்பதைக் காணமுடிகிறது. தும்பிகளைக் கண்ட சிறுவர்கள் அச்சத்தில் அலறினர். மற்றவர்கள் தங்கள் உடலில் இருந்து பூச்சிகளை அகற்றுவதையும் அந்தக் காணொளிகளில் காண முடிந்தது.மத்திய மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவு கடந்த இரண்டு வாரங்களாக வறட்சியில் உள்ளது. அங்குள்ள குளங்கள் வறண்டுபோக ஆரம்பித்ததாலும் கொசுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதாலும் தும்பிகள் தாங்கள் வாழ்வதற்கான வேறு இடத்தை நாடிப் பறக்கத் தொடங்கிவிட்டன என்று ரோட் தீவு இயற்கை வரலாற்று ஆய்வின் நிர்வாக இயக்குநர் டேவிட் டபிள்யூ கிரெக் கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளதுஅமெரிக்காவில் தும்பிகள் இப்படித் திரளாகப் பறப்பது இது முதல்முறையன்று.2019ல் அதிக அளவு தும்பிகள் அமெரிக்காவின் சில பகுதிகளில் குவிந்தன. இந்தியானா, ஒஹையோ, பென்சில்வேனியா ஆகிய மூன்று மாநிலங்களில் வானிலை ரேடாரில்கூட இப்படிக் கூட்டமாகப் பறக்கும் காட்சிகள் பதிவாகின.

மூலக்கதை