பாரிஸ் ஒலிம்பிக்: பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்/ Paris Olympics PV Sindhu reached round of 16

  மாலை மலர்
பாரிஸ் ஒலிம்பிக்: பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்/ Paris Olympics PV Sindhu reached round of 16

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வீராங்கனை பி.வி. சிந்து "எம்" பிரிவில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று எஸ்தோனியா வீராங்கனை கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார்.முதல் கேம்-ஐ பி.வி. சிந்து 21-5 என எளிதில் கைப்பற்றினார். 2-வது கேம்-ஐயும் பி.வி. சிந்து 21-10 என கைப்பற்றினார். இதனால் 2-0 என எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முன்னேறினார்.பி.வி. சிந்துவுக்கு முதல் கேம்-ஐ கைப்பற்ற 14 நிமிடங்களும், 2-வது கேம்-ஐ கைப்பற்ற 19 நிமிடங்களும் தேவைப்பட்டது. மொத்தமாக 34 நிமிடத்தில் பி.வி. சிந்து எஸ்தோனியா வீராங்கனையை வீழ்த்தினார்முதல் போட்டியில் மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என வீழ்த்தியிருந்தார்.

மூலக்கதை