வெற்றி கொண்டாட்டத்தில் நடுவரை தாக்கிய வீரர்- Player Hits Umpire During Victory Celebration

  மாலை மலர்
வெற்றி கொண்டாட்டத்தில் நடுவரை தாக்கிய வீரர் Player Hits Umpire During Victory Celebration

நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது. இந்த போட்டியில் 45 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய சோகோ ரேன்சர்ஸ் அணி 230 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து விளையாடிய ரெயின்போ அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ப்ரான்சிஸ் கடைசி பந்தை சிக்சராக விளாசினார்.இதனையடுத்து வெற்றியை கொண்டாடும் விதமாக பேட்டை பறக்கவிட்டார். அந்த பேட் நடுவரின் காலில் வந்து தாக்கியது. வலியால் துடித்த நடுவர் அந்த சமயத்திலும் பணியை சிறப்பாக செய்யும் விதமாக சிக்சர் என சிரித்தப்படி வழங்கினார். நடுவர் மீது பேட் பட்டத்தை கண்டும் காணாமல் இருந்த பேட்டர் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை