Lovlina advances to Olympic Boxing Games quarters/குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை லவ்லினா

பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்நிலையில், பெண்கள் குத்துசண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், நார்வே வீராங்கனைஹோப்ஸ்டெட் உடன் மோதினார்.இந்தப் போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம் லவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
மூலக்கதை
