வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை தேவை- IPL teams have requested the BCCI to take action against foreign players

மும்பை:ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதற்கு முன்பாக இன்று ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அணியின் உரிமையாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.அந்த வகையில் ஐ.பி.எல். சீசனில் இருந்து கடைசி நிமிடத்தில் விலகும் வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பி.சி.சி.ஐ.-யிடம் ஐ.பி.எல். அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கடைசி நேரத்தில் அல்லது முக்கியமான கட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவது வாடிக்காயாக உள்ளது. உதாரணமாக, போன ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதலில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில் இருந்த போது, இங்கிலாந்து அணி வீரர் வில் ஜக் சிறப்பாக விளையாடினார்.இதனால் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து விளையாடி ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்று தருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பிளே ஆப் சுற்றில் விளையாடாமல் உடனே இங்கிலாந்து சென்று விட்டார். இப்படி பல வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கோரிக்கை உள்ளது.
மூலக்கதை
