Deepika Kumari beats Dutch archer 6-2 in the 2nd round/பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

  மாலை மலர்
Deepika Kumari beats Dutch archer 62 in the 2nd round/பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ்பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.

மூலக்கதை