திருப்பரங்குன்றத்தில் சஷ்டி தேரோட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று நடந்தது.
காலை 9:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டதேரில் எழுந்தருளினார். நவ. 13முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது. கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர்.
பாவாடை நைவேதனம்: மாலை 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியினால் தயாரான தயிர் சாதம் படைத்து, அதன்மீது காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை தரிசனம் நடந்தது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள் பாலித்தார்.
திருக்கல்யாணம்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடந்தது சீர்வரிசை தட்டுகள் எடுத்துவரப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பூஜை முடிந்து மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று நடந்தது.காலை 9:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில்
மூலக்கதை
