கலகலக்க போகும் 'இண்டியா' கூட்டணி!

தினமலர்  தினமலர்
கலகலக்க போகும் இண்டியா கூட்டணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


என். நக்கீரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், தற்போது அந்த பிரச்னையை முன் வைப்பது ஏன்' என, பா.ஜ., கேட்க வேண்டிய கேள்வியை, 'இண்டியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ராகுலிடம் கேட்டுள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், இண்டியா கூட்டணி தலைவர்களிடையே உருவாகி இருக்கும் மோதல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டன.

பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் ஜாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.

தமிழக முதல்வரோ, 'அது மத்திய அரசின் பொறுப்பு' என்று, 'ஜகா' வாங்கி விட்டார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி - காங்கிரஸ் இணைந்து போட்டியிட முயன்றாலும், அம்மாநில காங்., தலைவர்களும், ராகுலும் உடன்படாததால், சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. அப்போதே, காங்., மீது அகிலேஷ் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

கூட்டணிக்கு விதை போட்ட நிதீஷ் குமாரே, 'கூட்டணி செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை' என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். டிச., 3ல் வெளியாகும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், இண்டியா கூட்டணி தொடருமா அல்லது அம்பேல் ஆகுமா என்பதை தெளிவுபடுத்தி விடும்.

என்ன தான் திராவிட செம்மல்கள், மீண்டும் 'பா.ஜ., ஆட்சிக்கு வரக் கூடாது' என தொடர்ந்து பிரசாரம் செய்தாலும், அதனால் எந்த பலனும் இல்லை. புத்தாண்டு பிறப்பதற்குள், இண்டியா கூட்டணி கலகலக்க போவது நிச்சயம்!

என். நக்கீரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், தற்போது

மூலக்கதை