திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், திருச்செந்துார் கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம், 2,000 ரூபாயாகவும், அபிஷேக கட்டணம், 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
திருச்செந்துார் முருகன் கோவிலில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அறநிலையத்துறை செய்து கொடுத்தது.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வை பொறுக்க முடியாத சிலர், தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக, திட்டமிட்டு தவறான செய்தியை பரப்புகின்றனர்.
கடந்த, 2018ல், அ.தி.மு.க., ஆட்சியில், அந்தக் கட்சி பா.ஜ., கூட்டணியில் இருந்த போது தான், 500 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம், 2,000 ரூபாயாகவும், அபிஷேக கட்டணம், 500லிருந்து, 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு வரை, 800 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசன கட்டணம், இந்தாண்டு அறங்காவலர் குழு முடிவின்படி, அறிவிப்பு வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டு, அதன்பின், 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இருப்பினும், ௧௦௦ ரூபாய் சிறப்பு தரிசனமும் மற்றும் பொது தரிசனமும் தொடர்கிறது. எனவே, தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ஒரு சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி, பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவது சரியல்ல.
பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகிக்கும், எந்த திருக்கோவில் விவகாரங்களிலும், அறநிலையத்துறை தலையிடுவதில்லை. நகைகள் சரிபார்ப்பு பணி, கோவில் வருமானங்களின் பயன்பாடு குறித்து புகார்கள் வந்தால், அறநிலையத்துறை கணக்கு கேட்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அதையே, நாங்கள் செய்து வருகிறோம்.
சட்டத்திற்கு உட்பட்டு கோவில் நிர்வாகம் நடைபெறுமானால், அதில், அறநிலையத்துறை தலையிடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், திருச்செந்துார் கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம், 2,000 ரூபாயாகவும், அபிஷேக கட்டணம், 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது,'' என, ஹிந்து அறநிலையத்துறை