பசுமை வழித்தட பணி தாமதம்; வீணாக போகிறது மத்திய நிதி

தினமலர்  தினமலர்
பசுமை வழித்தட பணி தாமதம்; வீணாக போகிறது மத்திய நிதி


சென்னை : மத்திய அரசு, பசுமை மின் வழித்தடம் இரண்டாம் கட்டத்தின் கீழ், தமிழகத்தில், 720 கோடி ரூபாய் மதிப்பிலான மின் வழித்தட பணிகளை மேற்கொள்ள, 2022 ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில், 400 கிலோ வோல்ட் திறன்; கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் மற்றும் திருப்பூரில் தலா, 230 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்களும் மற்றும் 624 கி.மீ., மின் வழித்தடங்களும் அமைக்கப்பட உள்ளன.

இதன் வாயிலாக கூடுதலாக, 4,000 மெகா வாட் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை கையாள முடியும்.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மொத்த நிதியில், 237.52 கோடி ரூபாயை மத்திய அரசு நிதி உதவியாக வழங்கும்.

மீதி, 237.52 கோடி ரூபாயை ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ., கடனாக வழங்கும். எஞ்சிய நிதியை, தமிழக அரசு வழங்க வேண்டும்.

பசுமை மின் வழித்தட இரண்டாம் கட்ட திட்டத்தின்படி, அதன் கட்டுமான பணிகளை வரும் டிசம்பருக்குள் துவக்க வேண்டும்.

பின், 2025 - 26க்குள் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி துவக்காவிட்டால், மத்திய அரசின் நிதி கிடைக்காது. மத்திய அரசு அளித்துள்ள அவகாசத்திற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது.

இருப்பினும் தமிழகத்தில், பசுமை மின் வழித்தட பணிகளை மின் வாரியம் துவக்காமல் உள்ளது. இதனால், மத்திய அரசின் நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை : மத்திய அரசு, பசுமை மின் வழித்தடம் இரண்டாம் கட்டத்தின் கீழ், தமிழகத்தில், 720 கோடி ரூபாய் மதிப்பிலான மின் வழித்தட பணிகளை மேற்கொள்ள, 2022 ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.இத்திட்டத்தின்

மூலக்கதை