உலக பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகராகுவா பெண்

தினமலர்  தினமலர்
உலக பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகராகுவா பெண்

சான்சால்வடார்: நிகராகுவா நாட்டை சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.

72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்திய சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார்.

நிகராகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்கு நுழைந்தனர். இதையடுத்து, நிகராகுவா நாட்டை சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.

சான்சால்வடார்: நிகராகுவா நாட்டை சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் நடந்தது.

மூலக்கதை