தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில்.ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள்பறிமுதல்!

தினமலர்  தினமலர்
தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில்.ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள்பறிமுதல்!

புதுடில்லி : சட்டசபை தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் இருந்து, 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள், போதை பொருட்கள், ரொக்கம், மதுபானங்கள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல்கள் நடக்கின்றன.

இவற்றில், மூன்று மாநில தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா தேர்தல்கள் வரும் 25 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கின்றன.

நடவடிக்கைஇந்த ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து ஓட்டுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த ஐந்து மாநிலங்களிலும் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், நகை, ரொக்கம் உள்ளிட்ட இலவச பொருட்கள் குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், இங்கு அனைத்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இடையே களத்தில் சமமான போட்டியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் வலியுறுத்தினார்.

வாய்ப்புஇந்த முறை, தேர்தல் செலவின கண்காணிப்புக்கு புதிய தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது. இது மிகச் சிறப்பான பலனை அளித்துள்ளது.

இதன் வாயிலாக, மத்திய - மாநில விசாரணை அமைப்புகள் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பும், உளவு தகவல்களும் பகிரப்பட்டன.

தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் இதுவரை 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள், போதை பொருட்கள், ரொக்கம், மதுபானங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்களில், 2018 சட்டசபை தேர்தல்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதிப்பை விட இது ஏழு மடங்கு அதிகம்.

மிசோரமில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்படவில்லை.

மாறாக, 29.82 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லி : சட்டசபை தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் இருந்து, 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள், போதை பொருட்கள், ரொக்கம், மதுபானங்கள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக

மூலக்கதை