மணிப்பூரில் இருவர் சுட்டுக்கொலை : மீண்டும் பதற்றம்

இம்பால் :மணிப்பூரில், பாதுகாப்பு படை வீரர் உள்ளிட்ட இரண்டு பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கூகி -மற்றும் மெய்டி பிரிவினரிடையே, கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இம்பால் உட்பட மாநிலம் முழுதும் கடந்த ஐந்து மாதங்களாக நடந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் மணிப்பூரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
இந்நிலையில், காங்க்போபி மாவட்டத்தில் ஐ.ஆர்.பி., எனப்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச்
சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் மற்றும் அவரது ஓட்டுனர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவரும், வாகனம் ஒன்றில் பயணித்த போது, ஹாரோதல் மற்றும் கோப்ஷா கிராமங்களின் இடையே இந்த சம்பவம் நடந்துஉள்ளது. அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பழங்குடியின சமூகத்தினரை குறிவைத்து தாக்கும் கிளர்ச்சியாளர்களின் முக்கிய இடமாக கருதப்படும் சிங்டா அணையை ஒட்டிய பகுதியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், காங்க்போபி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
இம்பால் :மணிப்பூரில், பாதுகாப்பு படை வீரர் உள்ளிட்ட இரண்டு பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன்
மூலக்கதை
