‛‛காசா மருத்துவமனையில் சுரங்கப்பாதை‛‛ : ஹமாஸின் ரகசியத்தை போட்டு உடைத்தது இஸ்ரேல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: காசாவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தும் சுரங்கப் பாதையை கண்டுபிடித்துள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த அக்., 7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. இதில், இஸ்ரேலில் 1,400 பேரும், காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட, 10,000க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில், இஸ்ரேல் படைகள் தொடர் சோதனையில் ஈடுபட்டன.
காசாவில் செயல்படும் அல் ஷிபா மருத்துவமனையில் 10 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை ஒன்றை கண்டுப்பிடித்துள்ளோம். இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தும் ஹமாஸ் குழுவினர், மருத்துவமனையை தங்கள் புகலிடமாக பயன்படுத்துகிறது என இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
ஜெருசலேம்: காசாவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தும் சுரங்கப் பாதையை கண்டுபிடித்துள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.nsimg3485496nsimgமேற்காசிய நாடான