துருவ நட்சத்திரம் - திட்டமிட்டபடி வெளியாகுமா?

  தினமலர்
துருவ நட்சத்திரம்  திட்டமிட்டபடி வெளியாகுமா?

தீபாவளி வெளியீடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நவம்பர் 24ம் தேதி ஏழெட்டு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

“துருவ நட்சத்திரம், 80ஸ் பில்டப், சில நொடிகளில், ஜோ, லாக்கர், கட்டில்” ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் அந்தப் பட்டியலில் யோகி பாபு, விதார்த் நடித்துள்ள 'குய்கோ' படமும் இடம் பெறுகிறது.

இருப்பினும் 'துருவ நட்சத்திரம்' படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனையே நேற்றுதான் முடிந்து, யார் வினியோகஸ்தர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், தமிழக வினியோக உரிமைக்கான வியாபாரம் இன்னும் முடியவில்லை என்கிறார்கள். இன்றிரவுக்குள் முடிந்தால் படம் இந்த வாரம் வெளியாகும் அல்லது தள்ளிப் போகும் என்பதே இப்போதைய நிலைமை.

மூலக்கதை