முருகன் கோயில்களில் இன்று கந்தசஷ்டிசூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்

  தினமலர்
முருகன் கோயில்களில் இன்று கந்தசஷ்டிசூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்



ராமநாதபுரம்: இன்று (நவ.18) கந்த சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம், நாளை (நவ.19) திருக்கல்யாணம் நடக்கிறது.

ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, குமரய்யா கோயில் மற்றும் பெருவயல் கிராமத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் ஆகிய இடங்களில் கந்தசஷ்டி விழா நவ.13ல் துவங்கி நவ.19 வரை நடக்கிறது.

விழாவில் தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியாக இன்று (நவ.18) சஷ்டியை முன்னிட்டு மாலை சூரசம்ஹாரம், நாளை (நவ.19) காலை திருக்கல்யாணம் நடக்கிறது.

இதே போல ராமநாதபுரம் வழிவிடு முருகன்கோயில், வடக்கு தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெளிப்பட்டணம் முத்தால பரமேஸ்வரி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன்சன்னதியில் இன்று சூரசம்ஹாரம், நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன்.

ராமநாதபுரம்: இன்று (நவ.18) கந்த சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம், நாளை (நவ.19) திருக்கல்யாணம் நடக்கிறது.ராமநாதபுரம்

மூலக்கதை