நெடுஞ்சாலை கொள்ளையர்கள் போல் போலீசார் அராஜகம்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., கவனிப்பாரா?

தினமலர்  தினமலர்
நெடுஞ்சாலை கொள்ளையர்கள் போல் போலீசார் அராஜகம்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., கவனிப்பாரா?

விழுப்புரம்: கெங்கராம்பாளையம் செக் போஸ்டில், சோதனை என்ற பெயரில், சீருடை இல்லாமல் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் போல நடுரோட்டில் நின்று கொண்டு, வாகனங்களை நிறுத்தி அநாகரீகமாக நடந்து கொள்ளும் போலீசாரின் நடவடிக்கையால்வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தமிழக பகுதிக்கு கடத்தப்படுவதைத் தடுக்க, புதுச்சேரி எல்லைப் பகுதியான கெங்கராம்பாளையம், கோட்டக்குப்பம் பகுதிகளில் தமிழக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செக் போஸ்ட் அமைத்து சோதனை மேற்கொள்கின்றனர்.

வாகன சோதனை செய்யும் போலீசார், வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, கெங்கராம்பாளையம் செக் போஸ்டில் மாலை 4:00 மணிக்கு, போலீஸ் சீருடை இன்றி சாதாரண உடையில், 3 பெண்கள் நடுரோட்டில் நின்று வாகனத்தை மறிக்கின்றனர்.

தாங்கள் போலீஸ் எனக் கூறி, வாகன ஓட்டிகளிடம், 'சரக்கு கடத்துகிறாயா' என மிரட்டல் விடும் பாணியில் பேசுகின்றனர்.

அடுத்த சில நொடியில் செக்போஸ்ட் அறையில் இருந்து சீருடை அணிந்த போலீசார் வெளியே வந்து அவர்களுடன் சேர்ந்து வாகனத்தை சோதனை செய்கின்றனர்.

வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்வது தவறில்லை. போலீசார் என்றால் முதலில் சீருடை அணிய வேண்டும். சீருடை இன்றி ரவுடித்தனமாக 3 பெண்கள் நடுரோட்டில் வாகனத்தை மறிப்பது தவறான செயல்.

மாலை நேரத்தில் திருநங்கையர்கள் தான் சாலையில் நின்று வாகனத்தை மறிப்பது வழக்கம். இதனால், சீருடை இன்றி நிற்கும் பெண்களைப் பார்த்தால் நெடுஞ்சாலை கொள்ளையர்களா, திருநங்கைகளா அல்லது உண்மையில் போலீஸ்தானா என தெரியாமல் வாகன ஓட்டிகள் குழம்புகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன், செஞ்சியில் இருந்து திரும்பிய வாலிபரிடம் லிப்ட் கேட்டு வந்த மர்ம நபர், லிப்ட் கொடுத்த நபரின் கழுத்தில் கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. அதனால், சாலையில் நின்று கொண்டு வாகனத்தை மறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கை ஒட்டுமொத்த மாவட்ட போலீசார் மீதான செயல்பாடுகளையும் சந்தேகப்படும்படி செய்கிறது.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்தெந்த சாலை வழியாக சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறது, யார் கடத்தி செல்வார்கள் என்பது மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு நன்றாக தெரியும். சோதனை என்ற பெயரில், சீருடை இன்றி, நெடுஞ்சாலை கொள்ளையர்கள் போல் நடுரோட்டில் நின்று வாகனங்களை மடக்கி அநாகரீகமாக நடந்து கொள்ளும் போலீசாரின் நடவடிக்கைகள், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,க்கு தெரியுமா?

விழுப்புரம் நகரின் மையப்பகுதியான பெரிய காலனி, மகாராஜபுரம், அனிச்சம்பாளையம், பண்ருட்டி சாலை, பில்லுார், திருப்பாச்சனுார்மேடு, முத்தாம்பாளையம், நன்னாடு உள்ளிட்ட பல இடங்களில் புதுச்சேரி சாராயம், பிராந்தி, பீர், விஸ்கி என அனைத்து மதுபானங்களும் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது.புதுச்சேரி சரக்குகளை விற்பனை செய்வோர், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரை வாரந் தோறும் 'கவனிப்பதால்' கண்டு கொள்வதில்லை.விழுப்புரம் நகரின் மையப்பகுதியான பெரிய காலனி, மகராஜபுரம், அனிச்சம்பாளையம், பண்ருட்டி சாலை, பில்லுார், திருப்பாச்சனுார்மேடு, முத்தாம்பாளையம், நன்னாடு உள்ளிட்ட பல இடங்களில் புதுச்சேரி சாராயம், பிராந்தி, பீர், விஸ்கி என அனைத்து மதுபானங்களும் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது.புதுச்சேரி சரக்குகளை விற்பனை செய்வோர், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரை வாரம் தோறும் 'கவனிப்பதால்' கண்டு கொள்வதில்லை.கெங்கராம்பாளையம் செக் போஸ்டில் வாகன சோதனையில் தினசரி 100க்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால், யார் மீதும் வழக்குப் பதிவு செய்வது கிடையாது.பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட சாராய வியாபாரிகளிடம் மீண்டும் விற்பனைக்கு சென்று விடுகிறது. விலை உயர்ந்த மதுபாட்டில்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரிசாக கொடுக்கப்பட்டு விடுகிறது.விழுப்புரம்: கெங்கராம்பாளையம் செக் போஸ்டில், சோதனை என்ற பெயரில், சீருடை இல்லாமல் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் போல நடுரோட்டில் நின்று கொண்டு, வாகனங்களை நிறுத்தி அநாகரீகமாக நடந்து கொள்ளும்

மூலக்கதை