குன்றத்தில் தீபத் திருவிழா கொடியேற்றம் நவ.,26ல் மலைமேல் மகா தீபம்

தினமலர்  தினமலர்
குன்றத்தில் தீபத் திருவிழா கொடியேற்றம் நவ.,26ல் மலைமேல் மகா தீபம்திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ.,26ல் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

காலை 7:05 மணிக்கு கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.

திருவிழா நம்பியார் செல்லப்பா சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இன்று முதல் நவ., 27 வரை தினமும் காலை சுவாமி, தெய்வானை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.

திருவிழா 6ம் நாளான நவ.,23ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. நவ.,25ல் பட்டாபிஷேகம், நவ.,26ல் காலை தேரோட்டம், மாலையில் மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ.,26ல் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. காலை 7:05

மூலக்கதை