பழநியில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் இன்று திருக்கல்யாணம்

தினமலர்  தினமலர்
பழநியில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் இன்று திருக்கல்யாணம்

பழநி:பழநி முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா' கோஷத்துடன் முருகன்பெருமான் அரக்கன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா நவ.13ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்த சஷ்டியான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் ,மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை,அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று கோயில் திருநடை சாத்தப்பட்டது.

பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை உடன் முத்துக்குமார சுவாமி, முருகன் கோயிலிருந்து சின்னகுமாரசுவாமியும் அடிவாரத்தில் எழுந்தருளினர்.

பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

அதன்பின் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவீதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூர பத்மன் என சூரசம்ஹாரம் நடைபெற்றது. இறுதியில் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா, முருகன்கோயிலில் இரவு சம்ரோட்ஷண பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.

இன்று காலை 9:30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேய்வானை உடன் சண்முகருக்கும் மாலை 6:30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பழநி:பழநி முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா' கோஷத்துடன் முருகன்பெருமான் அரக்கன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

மூலக்கதை