எலும்பாலான பழங்கால கருவி கண்டெடுப்பு

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் எலும்பாலான பழங்கால கருவி, பானையோட்டு குறியீடு, சங்க கால கூரையின் ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா, செயலர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் இக்கோட்டை பகுதியில் கள ஆய்வு செய்தனர்.
காளிராஜா கூறியதாவது:
சங்க காலத்துடன் தொடர்புள்ள பாண்டியன் கோட்டை பழமையான தொல்லியல் மேடாக அமைந்துள்ளது. கோட்டை வட்ட வடிவில் அமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
கோட்டை, 33 ஏக்கரில் நடுவில் நீராவி குளத்துடன் புறநானுாற்றில் குறிப்பிடப்படும், 21வது பாடலின்படி 'குண்டுகண் அகழி' போன்ற அகழியை உடையதாக அமைத்துள்ளது.
கிழக்கில் கோட்டை முனீஸ்வரர் கோவில், தெற்கில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் உள்ளன. ஆய்வில், தொடர்ந்து தொன்மையான எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இதில் வட்டச்சில்லுகள், பானை ஓட்டு எச்சங்கள், பானை ஓட்டுக்கீறல்கள், குறியீடுகள், சங்ககால செங்கற்கள், எடைக்கல் கிடைத்துள்ளன.
தற்போது வட்டச்சில்லுகள், பானை ஓட்டுக்குறியீடுகள், அரிதான எலும்பாலான முனையை உடைய கருவி, பழங்கால கூரை ஓட்டு எச்சங்கள் கிடைத்துள்ளன.
எலும்பை தேர்வு செய்து, அதன் முனையை கூர்மையாக்கி அம்பு போன்ற பயன்பாட்டிற்காகவோ அல்லது நெசவு செய்யும் கருவியாகவோ இக்கருவியை பயன்படுத்தி இருக்கலாம்.
இதுபோன்ற பொருள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்த இடம் தொல்லியல் துறையால் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் எலும்பாலான பழங்கால கருவி, பானையோட்டு குறியீடு, சங்க கால கூரையின் ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை
மூலக்கதை
