பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் நெல்லிக்குப்பம் விவசாயிகள் கவலை

தினமலர்  தினமலர்
பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் நெல்லிக்குப்பம் விவசாயிகள் கவலைநெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாய பயிர்களை, காட்டுபன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் பகுதி களில், காட்டுபன்றிகள் இனப்பெருக்கம் அடைந்து ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இவைகள், இரவு நேரங்களில் கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இதனால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினரிடம் விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இநிலையிலேயே நேற்று முன்தினம் இரவு, விஸ்வநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், முருகன் ஆகியோர் பயிர் செய்திருந்த வாழை கன்றுகளை, காட்டுபன்றிகள் வேரோடு பிடுங்கி போட்டது.

அவர்கள் கூறுகையில், கேரளாவை போல் தமிழக அரசும் காட்டு பன்றி களை கட்டுப்படுத்த அதிரடியில் இறங்க வேண்டும்.

அப்போதுதான், விவசாயிகளை பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்றனர்.

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாய பயிர்களை, காட்டுபன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நெல்லிக்குப்பம் பகுதி களில்,

மூலக்கதை