இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாலே: மாலத்தீவுகளிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என அந்நாட்டின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்தார்.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார். நேற்று (18 ம் தேதி) அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
முகமது மூயிஸ் சீன ஆதரவு நிலைப்பாடு உள்ளவர். 'நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார்.இதையடுத்து மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.
மாலே: மாலத்தீவுகளிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என அந்நாட்டின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்தார்.தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர்
மூலக்கதை
