மழையால் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்பு: மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி

தினமலர்  தினமலர்
மழையால் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்பு: மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கார்த்திகை தீபத்திற்கான அகல் விளக்கு உற்பத்தி, மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

கார்த்திகை தீப விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் கோவில்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் அகல்விளக்கேற்றி வழிபடுவது வழக்கம் இதற்காக, பாரம்பரிய விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை, சாலை அகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், கடந்த 10 நாட்களாகவே கார்த்திகை தீபத்திற்கான, விதவிதமான அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏரிகளிலிருந்து களிமண் கொண்டு வந்து, அச்சில் வார்த்து, விளக்கு தயாரிக்கப்பட்டு, அதனை உலர்த்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமான அகல் விளக்குகள், நவீன ஸ்டார் விளக்குகள், தாமரை விளக்குகள், ஒருமுக அகல் விளக்கு, 5 முக விளக்குகள், பெரியது முதல் சிறியது வரை ஏராளமான விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.

தற்போது, அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு, சூளையிடப்பட்டும், அதனை எடுத்து தயார்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்து சில நாள்களாக தொடரும் மழை காரணமாக, விளக்கு தயாரிக்கும்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், பிரபு, கருணாநிதி உள்ளிட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:

ஏரியிலிருந்து களிமண் எடுத்து வந்து, அகல் விளக்கு தயாரித்து, அதனை உலர்த்தி வைக்கப்பட்ட நேரத்தில், திடீர் மழை பெய்ததால் ஏராளமான விளக்குகள் உலர்த்த இடமின்றி பாதிக்கப்பட்டது. இதனால் அடுத்த கட்ட உற்பத்தி செய்வதும் தடைபட்டுள்ளது.

அதேபோல், உலர்த்தப்பட்ட அகல் விளக்குகளும் பத்திரப்படுத்தி எடுத்து வைக்கும் இட வசதியும் இல்லாமலும், அடுத்து சூளை இடவும் முடியவில்லை.

இப்பகுதியில் 100 குடும்பத்தினர், மண்பாண்டம், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒரு நபர் தினசரி 1,000 அகல் விளக்கு தயாரிப்பர். ஆனால், தற்போது 200 அகல்விளக்கு மட்டுமே தயாரிக்க முடிகிறது.

எங்களைப் போன்ற மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மண்பாண்ட பொருட்கள், அகல் விளக்குகள் தயாரித்து உலர்த்தி வைப்பதற்கும் பொதுவான களம், பதப்படுத்தி வைப்பதற்கு இரும்பு கூரை ஷெட் அமைத்து தர வேண்டும்.

களிமண் விழுப்புரம் மற்றும் பண்ருட்டி பகுதி ஏரிகளில் எடுத்து வர வேண்டியுள்ளது. ஒரு வண்டி களிமண் எடுத்து வர 14 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. சிலர் களிமண் எடுக்க விடாமல், கூடுதல் பணம் வசூலிப்பதால் தொழில் பாதிக்கிறது.

ஏரிகளில் தடையின்றி களிமண் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் வழங்கப்படும் நிவாரண தொகையும் சரிவர வழங்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கார்த்திகை தீபத்திற்கான அகல் விளக்கு உற்பத்தி, மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.கார்த்திகை தீப

மூலக்கதை