கன மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மாவட்டத்தில் 6 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின

  தினமலர்
கன மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மாவட்டத்தில் 6 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு அக்டோபர் கடைசியாக துவங்கியபோதும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

அக்டோபர் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு கூட பெய்யவில்லை.கனமழை பெய்யக்கூடிய நவம்பர் மாதம் 14 நாட்கள் உருண்டோடிவிட்டன.

தற்போதுதான் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்தஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பருவமழை 23 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

அதன் காரணமாக கடலுார் மற்றும் காவிரி டெல்டா பகுதிக்கு உட்பட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் 'ஆரஞ்ச்' அலர்ட் விடுத்தது.அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடலுார், பரங்கிப்பேட்டை கடலோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. 13 மற்றும் 14ம் தேதிகளில் 36 மணி நேரத்தில் 18செ.மீ., மழை கொட்டியது.

ஒரே நேரத்தில் இவ்வளவு மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து, நிரம்பி வருகிறது.

வீராணம் நிரம்புகிறது



கடலுார் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாக இருப்பது வீராணம் ஏரி. இந்த ஏரியில் இருந்துதான் சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும்.

மழைக் காலங்களில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளானஅரியலுார், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக ஏரியைவந்தடையும்.கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஏரிக்கு 1000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் மழையின் காரணமாக கீழணை உயர்ந்து வருவதால் வடவாறு வழியாக 1614 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து 2614 கன அடி தண்ணீர் வீராணத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தற்போது வீராணம் நீர்மட்டம் (800 மில்லியன் கனஅடி) 44.55 அடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து பெருமாள் ஏரி 3 அடி உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 6 ஏரிகள் 75 சதவீதம், 39 ஏரிகள் 50 சதவீதம், 94 ஏரிகள் 25 சதவீதம், அதற்கு கீழ் உள்ள ஏரிகள் படிப்படியாக உயர்ந்து வருகின்றன.

இதேப்போல கிராமப்பகுதிகளில் உள்ள சிறு சிறு ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு அக்டோபர் கடைசியாக துவங்கியபோதும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.அக்டோபர் மாதம் முழுவதும்

மூலக்கதை