வெளிநாட்டு பயணங்கள்: பா.ஜ., - திரிணமுல் மோதல்

தினமலர்  தினமலர்
வெளிநாட்டு பயணங்கள்: பா.ஜ.,  திரிணமுல் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



கோல்கட்டா-வெளிநாட்டு பயணம் தொடர்பாக, பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது, மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில், ஐரோப்பிய நாடான ஸ்பெயின், மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொண்டார்.

மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். இது தொடர்பாக, பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துடன், முதல்வரின் பயணத்தை ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, நம் நாட்டின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டும் வகையில் பயணம் செய்கிறார். ஆனால், ஊழல் செய்வதற்காக மம்தா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு திரிணமுல் காங்.,கின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கலவரங்களால் மணிப்பூர் பற்றி எரியும்போது, மோடி வெளிநாடுகளுக்கு பயணம் சென்றார். அவருக்கு மணிப்பூர் குறித்து கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோல்கட்டா-வெளிநாட்டு பயணம் தொடர்பாக, பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது, மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க முதல்வர்

மூலக்கதை