வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்!

தினமலர்  தினமலர்
வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்!


கடந்த 2017ம் ஆண்டில் ‛8 தோட்டங்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இளம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். அதன் பிறகு இவர் இயக்கும் அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இவ்வாறு கடந்த ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் திரைக்கு வந்த 'குருதி ஆட்டம்' ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.

இந்த நிலையில் நீண்ட மாதங்கள் கழித்து ஸ்ரீ கணேஷின் அடுத்த கட்டத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்ரீ கணேஷ் புதிதாக வெப் தொடர் ஒன்றை அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு இயக்குகிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்கள் நடைபெற்றது. இப்போது இதன் நடிகர், நடிகை தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

மூலக்கதை