பிரதமர் மோடிக்கு சிறப்பு பிரசாதம்!

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடிக்கு சிறப்பு பிரசாதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப்., 17ல், நாடு முழுதும் கொண்டாடப்பட்டது; உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையெல்லாம் விட, மோடி முக்கியமாக கருதுவது, தமிழகத்திலிருந்து வந்த பிரசாதம் என்கின்றனர்.

தருமபுரம் ஆதீனம் பிரதமர் மோடிக்கு சிறப்பு பிரசாதத்தை அனுப்பியிருந்தாராம். பிறந்த நாளன்று காலை இந்த பிரசாதம் மோடிக்கு வழங்கப்பட்டதாம். ஏற்கனவே பார்லிமென்டில் செங்கோல் நிறுவ, தமிழக ஆதீனங்களை அழைத்திருந்தார் மோடி; செங்கோல் நிறுவிய பின், ஆதீன சமய தலைவர்களிடம் ஆசியும் பெற்றார்.

இதைத் தவிர தமிழகத்தில் உள்ள மற்ற ஆதீனங்கள், செங்கோல் விழாவில் பங்கேற்றவர்கள், பிரதமருக்கு அன்பளிப்புகளையும், பிரசாதங்களையும் அனுப்பியிருந்தனராம்; இது மோடிக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாம்.

புதுடில்லி: பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப்., 17ல், நாடு முழுதும் கொண்டாடப்பட்டது; உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையெல்லாம் விட, மோடி முக்கியமாக கருதுவது, தமிழகத்திலிருந்து

மூலக்கதை