சபாநாயகர் மீது அரசு ஊழியர்கள் காட்டம்!

தினமலர்  தினமலர்
சபாநாயகர் மீது அரசு ஊழியர்கள் காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'ஏசி அறையில, ஓசியில தங்குதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாருன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில், பழைய பைபாஸ் சாலை நான்கு ரோடு அருகே, தனியார் ஹோட்டல், அரசு அனுமதி பெற்ற பார், தங்கும் விடுதி இருக்கு வே...

''ஜேடர்பாளையத்துல, ரெண்டு சமுதாயங்களுக்கு இடையிலான பிரச்னையில, தொடர் அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நடக்குல்லா... இதனால, வேற மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இங்க பாதுகாப்பு பணிக்கு வர்றாவ வே...

''அப்ப, இங்குள்ள விடுதியின் ஏசி அறையில ஓசியில தங்குதாவ... இதுக்கு கைமாறா, பார்ல காலை 6:00 மணி முதல் ராத்திரி 11:00 மணி வரை நடக்குற மது விற்பனையை, உள்ளூர் போலீசாரும் கண்டுக்குறது இல்ல வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஆட்சி மாறினாலும், பாசமும், விசுவாசமும் இன்னும் குறையல ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாருக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருத்தர், கும்பகோணத்துக்கு சமீபத்துல, 'விசிட்' அடிச்சார்... அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகியின் வீட்டு திருமணத்துக்கு தான் போயிருக்கார் ஓய்...

''இவா ரெண்டு பேருக்கும் இடையிலான, 'பசை'யுள்ள நட்பால கிடைச்ச கணிசமான லாபத்துக்கு நன்றிக்கடன் செலுத்தணுமோன்னோ... அதுக்காக, விலை உயர்ந்த பரிசையும் அதிகாரி குடுத்துட்டு போனார் ஓய்...

''அது மட்டுமில்லாம, 'அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு என்ன பிரச்னைன்னாலும், ஒத்தாசைக்கு நான் இருக்கேன்றத மறந்துடாதேள்'னும் சொல்லியிருக்கார்... இது, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு தெரிஞ்சு, உயர் அதிகாரி மேல ஒரு கண் வச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இளங்கோவன், இதையும் கேட்டுட்டு போங்க...'' என, நண்பரை இழுத்து பிடித்த அந்தோணிசாமி, ''திட்டம் போட்டு இப்படி செய்துட்டாரேன்னு சபாநாயகர் மேல, தலைமை செயலக ஊழியர்கள் அதிருப்தியில இருக்காங்க...'' என்றார்.

''அவர் அப்படி என்ன பண்ணிட்டாரு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போன 20ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க... தலைமை செயலக வளாகத்திலேயே, மதிய உணவு இடைவேளையின் போது 1:30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடந்துச்சுங்க...

''இந்த செய்தியை சேகரிக்க பத்திரிகையாளர்கள் ஒருத்தர் கூட அந்த பக்கம் தலைகாட்டல... 'இதுக்கு சபாநாயகர் அப்பாவு தான் காரணம்'னு ஊழியர்கள் கொந்தளிக்குறாங்க...

''விஷயம் என்னன்னா, ஆர்ப்பாட்டம் அறிவிச்ச மதியம் 1:30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினாருங்க... எல்லாரும் அங்க போயிட்டாங்க...

''நம்ம ஆர்ப்பாட்ட செய்தி வெளியாவதை தடுக்கவே சபாநாயகர் திட்டமிட்டு சதி செய்துட்டதா, தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர் கடுப்புல இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''நாம பேசியதை பார்த்துட்டு, நடவடிக்கை எடுத்திருக்காங்க பா...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகாவுல, 10 வருவாய் கிராமங்கள் இருக்குது... இங்க, நகர நிலவரி திட்டத்துல வசூலிக்கிற வரி ரசீது புத்தகத்துல, 'கார்பன்' இல்லாம, வி.ஏ.ஓ.,க்கள் மோசடி பண்றதா பேசியிருந்தோமே பா...

''இது சம்பந்தமா, லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒருபக்கம் விசாரணை நடத்திட்டு இருக்காங்க... இப்ப, இந்த முறைகேடு சம்பந்தமா விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பும்படி, கிண்டி ஆர்.டி.ஓ., அருளானந்தனுக்கு, சென்னை பெண் கலெக்டர் உத்தரவு போட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை காத்துட்டு இருக்குன்னு சொல்லும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''கருணாநிதி சிலை திறப்பின் பின்னணியை கேளுங்க வே...'' என்றபடியே, அடுத்த மேட்டரை பேச ஆரம்பித்தார்...

''மதுரையில, விரகனுார் ரிங் ரோடு பக்கத்துல, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, 8 அடியில முழு உருவ சிலையை, சமீபத்துல அமைச்சர் உதயநிதி திறந்து வச்சாரு... ஏற்கனவே, சிம்மக்கல்லில் ஒரு கருணாநிதி சிலை இருக்கு வே...

''அது, தி.மு.க., மாநகர் மாவட்ட எல்லைக்குள்ள வருதாம்... புறநகர் மாவட்டச் செயலரா இருக்கிற பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, பிறந்த நாள் மற்றும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள்ல, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்க, சிம்மக்கல் அல்லது வாடிப்பட்டிக்கு தான் போக வேண்டியிருக்கு வே...

''இதனால, தன் மாவட்ட எல்லைக்குள்ள ஒரு கருணாநிதி சிலை இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சாராம்... உடனே, ரிங் ரோடு பகுதியில, சொந்தமா நிலம் வாங்கி, 8 அடியில வெண்கல சிலை அமைச்சு, உதயநிதியை வச்சு திறந்தும் வச்சுட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''சாதாரண கீழ்நிலை பணியாளரை பார்த்து, அதிகாரிகள் சல்யூட் அடிக்காத குறையா மரியாதை தரா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் குப்பண்ணா.

''எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை வீட்டு வசதி வாரிய அலுவலகத்துல, பல வருஷமா பணிபுரிந்த கண்காணிப்பாளர் இருவர் உட்பட. 13 பேர், விற்பனை பத்திரம் இழுத்தடிப்பு, கிரையம் செய்ததில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள்ல சிக்கினா ஓய்...

''இவா எல்லாரையும், சமீபத்துல வெவ்வேற மாவட்டங்களுக்கு துாக்கி அடிச்சுட்டா... ஆனா, அதே ஆபீஸ்ல கீழ்நிலை பணியாளரா இருக்கற ஒருத்தர் தான், 13 பேரையும் ஒருங்கிணைச்சு எல்லா முறைகேடுகளுக்கும் மூலகாரணமா இருந்திருக்கார் ஓய்...

''இப்பவும், இவர் கை காட்டற பைல்கள் தான், அடுத்த கட்டத்துக்கு நகர்றது... இவருக்கு, சென்னையில இருக்கற, வாரியத்தின் முக்கிய அரசியல் புள்ளியுடன் நேரடி தொடர்பு இருக்கறதால, அதிகாரிகளே, இவரை கண்டா நடுங்கறா... அதனால தான், இடமாற்ற நடவடிக்கையில இருந்தும் இவர் தப்பிட்டார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''சிங்காரம், முருகன் இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புதோம்...'' என, நண்பர்களுக்கு இடம் தந்து விட்டு அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

'ஏசி அறையில, ஓசியில தங்குதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில்,

மூலக்கதை