கனடா பிரதமரின் ஆபத்தான போக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
கே.நாகலஷ்மி, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கனடா நாட்டு குடியுரிமை பெற்ற, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜன்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனால் இறையாண்மை பாதிக்கப்படுவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பார்லிமென்டில் கூறியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ அவர்களே... ஹர்தீப் சிங், உங்கள் நாட்டு குடியுரிமை பெறுவதற்கு முன், இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி. கனடாவில் வசிக்கும் 7.50 லட்சம் சீக்கியர்களின் ஓட்டுக்காக, அவருக்கு அடைக்கலம் கொடுத்து குடியுரிமை அளித்துள்ளீர்கள்.
அவர்களில் ஊடுருவியுள்ள சில பயங்கரவாதிகளால், உங்கள் நாட்டில் உள்ள பல ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டன. கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஹிந்து மக்கள் பலர் தாக்கப்பட்டனர். உங்கள் நாட்டில், ஒரு சமூகத்தை சேர்ந்த உங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி, என்றாவது உங்கள் பார்லிமென்டில் பேசினீர்களா?
'காலிஸ்தான் ஒரு பயங்கரவாத அமைப்பு; அதை ஒடுக்க வேண்டும்' என்று, பலமுறை உங்களை இந்திய அரசு எச்சரித்தது. ஆனால், அதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் பயங்கரவாதிகளை ஆதரித்து, அவர்கள் கொலைக்கு இந்தியா தான் காரணம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள்.
பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் என்றும் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் ஆபத்து தான். இதற்கு சிறந்த உதாரணம், பாகிஸ்தான். பயங்கரவாத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுத்து, ஊக்குவித்து, இன்று அவர்களாலேயே, அந்த நாடு நிம்மதியிழந்து தவிக்கிறது; மேலும் அவர்களது பொருளாதாரமும் அதல பாதாளத்துக்கு சரிந்து விட்டது.
எனவே, ஜஸ்டின் ட்ரூடோ... நீங்கள் எடுத்து வைக்கும் அடி அபாயகரமானது. பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை கைவிடுங்கள்; இல்லையென்றால், உங்கள் நாட்டிற்கு என்றுமே ஆபத்து தான்.
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம் கே.நாகலஷ்மி, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கனடா நாட்டு குடியுரிமை
மூலக்கதை
