நெல் நடவு செய்த சப் - கலெக்டர்

தினமலர்  தினமலர்
நெல் நடவு செய்த சப்  கலெக்டர்

செஞ்சி:திண்டிவனம் சப் - கலெக்டர் கட்டா ரவி தேஜா, நேற்று காலை, செஞ்சி அடுத்த இல்லோடு கிராமத்தில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வு முடிந்து திரும்பும் வழியில், விவசாயிகள் நாற்று நடுவதை பார்த்தார். உடனே, தன் வாகனத்தை நிறுத்த சொல்லி இறங்கியவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது, விவசாயிகள் நடவு செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என்றதும், சப் - கலெக்டர் தன் ஷூவை கழற்றிவிட்டு விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டார். இதை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆச்சரியமுடன் பார்த்தனர்.

செஞ்சி:திண்டிவனம் சப் - கலெக்டர் கட்டா ரவி தேஜா, நேற்று காலை, செஞ்சி அடுத்த இல்லோடு கிராமத்தில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்து திரும்பும் வழியில், விவசாயிகள் நாற்று

மூலக்கதை