மேன்சன் 24 தமிழில் புதிய வெப் சீரியஸ்

தினமலர்  தினமலர்
மேன்சன் 24 தமிழில் புதிய வெப் சீரியஸ்

ஓம்கார் இயக்கத்தில் தமிழில் புதிதாக உருவாகியுள்ள வெப் தொடர் 'மேன்சன் 24'. இதில் வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், பிந்து மாதவி, அவிகா கோர், வித்யூ ராமன், ஸ்ரீமன், ஜெய பிரகாஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த தொடருக்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை