அமலாக்கத்துறை தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமலாக்கத் துறை இயக்குனராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, இந்த பதவிக்கு ராகுல் நவீன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இடைக்கால இயக்குனராக பணியாற்றுவார். இந்த பதவிக்கு பிரதமர் தலைமையிலான கமிட்டி புதிய அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் வரை, இந்த உயர் பதவியில் இருப்பார், நவீன்.
கடந்த, 1993 பேட்ச் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான நவீன், பதவியேற்ற உடனேயே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை ஆராய்ந்தாராம். பல எதிர்க்கட்சி தலைவர்களின் கோப்புகள் ஆராயப்பட்டன.
மோசடி வழக்கில் சிக்கியுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சிகள் என, அனைத்தையும் விரிவாக ஆராய்ந்தாராம். 'இந்த வழக்கு ஒரு முடிவிற்கு வர, உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்' என, அமலாக்க துறை சீனியர் வழக்கறிஞர் ஆலோசனை தெரிவித்துள்ளாராம்.
'செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது; எனவே அவர் உச்ச நீதிமன்றத்திற்கு வருவார். இப்போதுள்ள ஆதாரங்களை வைத்து பார்த்தால், குறைந்தபட்சம் இன்னும் ஓராண்டு காலம் செந்தில் பாலாஜி சிறையில் தான் இருக்க வேண்டியிருக்கும்' என்கிறார் இந்த மூத்த வழக்கறிஞர்.
புதுடில்லி: அமலாக்கத் துறை இயக்குனராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, இந்த பதவிக்கு ராகுல் நவீன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இடைக்கால
மூலக்கதை
