சபாநாயகர் புது முடிவு

தினமலர்  தினமலர்
சபாநாயகர் புது முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தற்போது இந்த கட்டடம் தான் சுற்றுலா தலம் ஆகிவிட்டது. எம்.பி.,க்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிடுவதோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில் ஒரு தி.மு.க., - எம்.பி., தன் குடும்பத்தினரோடு வந்து, 'போட்டோ ஷூட்' நடத்திச் சென்றார். 'ஜனாதிபதி மாளிகைக்கு பார்வையாளர்களை, அனுமதிப்பது போல, புதிய பார்லிமென்ட் கட்டடத்தையும் காண அனுமதி அளிக்க வேண்டும்' என, பலரும் விரும்பினர்.

அதை ஏற்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மஹாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2ல், இந்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், ஆன்லைன் வாயிலாக புதிய பார்லிமென்டை பார்க்க, 'புக்' செய்யலாம்; வாரத்தில் 3 நாட்கள் பார்க்க முடியும்.

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தற்போது இந்த கட்டடம் தான் சுற்றுலா தலம் ஆகிவிட்டது. எம்.பி.,க்கள் தங்கள் குடும்பத்துடன்

மூலக்கதை