சந்திரபாபு நாயுடுவிடம் சிறையில் விசாரணை

தினமலர்  தினமலர்
சந்திரபாபு நாயுடுவிடம் சிறையில் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்ராஜமுந்திரி,-ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், அம்மாநில சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இங்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு வாரியத்தில், 371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கடந்த, 9ம் தேதி சி.ஐ.டி., போலீசார் கைது செய்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க, சி.ஐ.டி., போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவரது உடல்நிலையை கருதி, நேற்று சிறை வளாகத்திலேயே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற உத்தரவின்படி வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக, அவரிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடு, தன் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தார்.

ராஜமுந்திரி,-ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், அம்மாநில சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர்.ஆந்திராவில், முதல்வர்

மூலக்கதை