'பழைய கட்டடத்துக்கே பார்லி.,யை மாற்றுவோம்'

தினமலர்  தினமலர்
பழைய கட்டடத்துக்கே பார்லி.,யை மாற்றுவோம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி,-''புதிய பார்லிமென்ட் வளாகம் எந்த விதத்திலும் உகந்ததாக இல்லை. வரும் 2024 லோக்சபா தேர்தலுக்குப் பின், அந்தக் கட்டடம் வேறு நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தப்படும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புதிய பார்லிமென்ட் வளாகம் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. சிறப்பு கூட்டத் தொடரும் அங்கு நடந்தது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலரான ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியுள்ளதாவது:

மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளுக்குப் பின், புதிய பார்லிமென்ட் வளாகம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை கொன்று, கலந்துரையாடுவதைக் கொன்று, புதிய பார்லிமென்ட் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுஉள்ளது.

இதில் இருந்து புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கான பிரதமரின் நோக்கம் நன்கு புரிகிறது. தன் சொந்த பெருமைக்காக இதை அவர் கட்டியுள்ளார். பேசாமல் இதற்கு, 'மோடி மல்ட்டிபிளக்ஸ் அல்லது மோடி மாளிகை' என்று பெயர் சூட்டலாம்.

புதிய பார்லிமென்ட் வளாகத்துக்கு சென்றால், அங்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவுக்கு இடையே எந்த பிணைப்பும் இல்லை. மேலும், மேலும், 'லாபி' எனப்படும் முற்றத்தில் எம்.பி.,க்கள் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பும் புதிய பார்லிமென்டில் இல்லை.

பழைய பார்லிமென்ட், வட்ட வடிவில் உள்ளது. அதனால், நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும், வழி தெரியாவிட்டால், வெளியே வர முடியும். ஆனால், முக்கோண வடிவிலான புதிய பார்லிமென்டில், ஒரு இடத்தில் தொலைந்துவிட்டால், வெளியே வருவது மிகவும் கடினம்.

பார்லிமென்டில் பணியாற்றும் ஊழியர்களும், மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக கூறியுள்ளனர்.

மீண்டும் பழைய கட்டடத்திலேயே பார்லிமென்ட் இயங்க வேண்டும். இதே கருத்து பலரிடமும் உள்ளது. வரும், 2024 தேர்தலுக்குப் பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய பார்லிமென்ட் கட்டடம் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., நட்டா பாய்ச்சல்ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளதாவது:காங்.,கின் மிகவும் தரக்குறைவான மனநிலையையே இது காட்டுகிறது. நாட்டின், 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை, எண்ணங்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது.பார்லிமென்டுக்கு எதிராக செயல்படுவது என்பது காங்கிரசுக்கு புதிதல்ல. கடந்த 1975ல் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை வாயிலாக அதை நசுக்க முயன்று தோல்வியடைந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.''இந்த வாரிசு கூட்டத்தின் குகைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும். பிரதமராக இருந்த இந்திரா வசித்த வீட்டை அவரது நினைவிடமாக மாற்றினர்; அது, தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. மற்றவற்றையும் கைப்பற்றி, தேசிய சின்னங்களாக மாற்ற வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.புதுடில்லி,-''புதிய பார்லிமென்ட் வளாகம் எந்த விதத்திலும் உகந்ததாக இல்லை. வரும் 2024 லோக்சபா தேர்தலுக்குப் பின், அந்தக் கட்டடம் வேறு நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தப்படும்,'' என,

மூலக்கதை