ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை

தினமலர்  தினமலர்
ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை

திருப்பூர், மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரரில் நர்மதை நதிக்கரையில் 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை நேற்று திறக்கப்பட்டது.

கேரள மாநிலம் காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் தமது எட்டாவது வயதில் குருவை தேடி வீட்டை வீட்டு வெளியேறி நர்மதை நதிக்கரையில் இருந்த குகையில் தவம் செய்தார்.

அப்போது கோவிந்த பகவத்பாதரை சந்தித்து சன்னியாச தீட்ைஷ பெற்றார்; நான்கு ஆண்டுகள் அவருடன் தங்கி வேதாந்தத்தை கற்றுத்தேர்ந்தார்.

குருவின் வழிகாட்டுதலுடன் 12வது வயதில் வாரணாசி பத்ரிநாத் சென்று பிரம்ம சூத்திரம் உபனிடதங்கள் மற்றும் பகவத்கீதை ஆகியவற்றுக்கு ஆதிசங்கரர் உரை எழுதினார்.

ஆதி சங்கரரின் தெய்வீக பயணம் நர்மதை நதிக்கரையில் தான் துவங்கியது என்பதை நினைவுறுத்தும் வகையில் ஆதிசங்கரருக்கு நர்மதை நதிக்கரையில் 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் இயங்கும் அரசு ஆச்சார்ய சங்கரர் கலாசார ஒருமைப்பாட்டு அறக்கட்டளை (ஆசார்ய சங்கர ஸாம்ஸ்க்ருதிக ஏகதா ந்யாஸ) அமைப்பை உருவாக்கியுள்ளது.

2017 - 18ல் துவங்கிய இவ்வமைப்பு சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் வழிகாட்டுதலுடன் சுவாமிகளையே புரவலராக ஏற்றுக்கொண்டு இயங்கி வருகிறது. 'ஒருமைப்பாட்டின் சிலை' என்ற அடையாளத்துடன் ஆதிசங்கரருக்கு 108 அடி உயரத்தில் பல்வகை உலோகத்தில் சிலை அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

திருப்பூர், மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரரில் நர்மதை நதிக்கரையில் 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை நேற்று திறக்கப்பட்டது.கேரள மாநிலம் காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் தமது எட்டாவது வயதில்

மூலக்கதை