பா.ஜ., பெயரை புறக்கணித்த பழனிசாமி

தினமலர்  தினமலர்
பா.ஜ., பெயரை புறக்கணித்த பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இல்லை என, அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு என்ற வார்த்தையையோ, பா.ஜ.,வின் பெயரையோ, பிரதமர் பெயரையோ குறிப்பிடவில்லை.

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் வரவேற்ற பழனிசாமி, தங்களுக்கும் பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, மறைமுகமாக உணர்த்தி உள்ளார். அதேநேரம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 'ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற உள்ள பிரதமருக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இல்லை என, அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக,

மூலக்கதை