அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ்

தினமலர்  தினமலர்
அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ்

நடிகர் ஆரவ் பிக்பாஸ் முதல் சீசனில் வெற்றியாளர். இது அல்லமால் நடிகராக மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ், சைத்தான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் 'கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துபாயில் துவங்குகிறது. ஏற்கனவே த்ரிஷா, ஹூமா குரேஷி, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ஆரவ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அர்ஜூன் தாஸ் ஒப்பந்தம் ஆகியதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது ஆரவ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரவ் ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை