எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் சீட்டுகள் ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் சீட்டுகள் ஒதுக்கீடுபுதுச்சேரி,: புதுச்சேரியில், எம்.பி. பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவும் உள் ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கு சென்டாக் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ இடங்கள், 'சென்டாக்' மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தாண்டு, எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மொத்தம், 370 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதற்கான வரைவு தர வரிசைப்பட்டியல், ஏற்கனவே வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது, நீட் அடிப்படையிலான, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், ஆயுர்வேதா, உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, முதல் கட்ட கலந்தாய்வு நடத்தி, சீட்டுகள், கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங் கள், நிர்வாக இடங்கள், சுயநிதி இடங்கள், தெலுங்கு, கிறிஸ்துவ உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இடங்கள் எனும் அடிப்படையில், விண்ணப்பத்தவர்களுக்கு சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள், இன்று காலை 9:00 மணி முதல், மாணவர் சேர்க்கை கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து, சீட் கிடைத்த மாணவர்கள், வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும்.

புதுச்சேரி தவிர்த்த, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய மாணவர்கள், நேரில், அல்லது ஆன் லைனில், சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த தகவலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி,: புதுச்சேரியில், எம்.பி. பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவும் உள் ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கு சென்டாக் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்கீடு

மூலக்கதை