தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு பா.ஜ., கண்டனம்

புதுடில்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில் லோக்சபாவில் பேசிய, தி.மு.க. - எம்.பி., ராஜா, “மணிப்பூர் கலவர விவகாரத்தில் நம் நாட்டை விமர்சித்து ஐரோப்பிய பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், “75 ஆண்டுகால பார்லி.,யின் ஜனநாயகம் குறித்த இன்றைய விவாதத்தை, ஒரு சில கட்சிகளை தவிர அனைத்துக் கட்சிகளும் முறையாக பின்பற்றின.
''சில உறுப்பினர்கள் அற்ப அரசியலில் ஈடுபடுவதும், விவாதத்தின் தரத்தை குறைப்பதும் வருத்தமளிக்கிறது,” என்று கண்டனம் தெரிவித்தார்.
ரவிசங்கர் பிரசாத், நிஷிகாந்த் துபே ஆகியோர், 'நம் நாட்டைக் கண்டித்து ஐரோப்பிய பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து இங்கு பேசலாமா, இது நியாயமா?' என கேள்வி எழுப்பினர்.
புதுடில்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில் லோக்சபாவில் பேசிய, தி.மு.க. - எம்.பி., ராஜா, “மணிப்பூர் கலவர விவகாரத்தில் நம் நாட்டை விமர்சித்து ஐரோப்பிய
மூலக்கதை
