பழைய பார்லிமென்டிற்கு பிரியாவிடை: புதிய கட்டடத்தில் இன்று முதல் கூட்டத்தொடர்

புதுடில்லி,ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எம்.பி.,க்கள் நேற்று பிரியாவிடை கொடுத்தனர்.
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர், புதிய பார்லிமென்ட் வளாகத்தில் இன்று முதல் நடக்க உள்ளது. நேற்று பிரதமர் பேசும்போது, பழைய பார்லி.,யில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை நினைவுபடுத்தினார்.
வடிவமைப்பு
நாட்டின் தலைநகரான புதுடில்லியின் மைய பகுதியில் அமைந்துள்ளது தற்போதைய பழைய பார்லிமென்ட் கட்டடம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பிரிட்டன் கட்டட கலைஞர்கள் எட்வின் லுட்யன்ஸ், ஹெர்பர்ட் பேகரால் வடிவமைக்கப்பட்டது, இந்தக் கட்டடம்.
கடந்த, 1921ல் துவங்கிய இதன் கட்டுமானம், 1927ல் முடிந்தது. இம்பீரியல் பில்டிங் என அப்போது அழைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், இம்பீரியல் ஆட்சி கவுன்சில் இயங்கியது.
அந்த காலகட்டத்தில், 8.30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த கட்டடம், 70 அடி உயரம், 560 அடி விட்டம் கொண்டது. மொத்தம், 144 பிரமாண்ட துாண்களுடன் கூடிய இந்த வட்ட வடிவமான கட்டடம், 5.66 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
செங்கோல்
போதிய இட வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, அதற்கு சற்று அருகிலேயே புதிய பார்லிமென்ட் தற்போது கட்டப்பட்டுள்ளது. கடந்த, மே 28ல் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தமிழகத்தின் சோழர்கள் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய செங்கோலை நிறுவி, இந்த புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த, 1948ல் நிறுவன பார்லிமென்ட் செயல்படத் துவங்கி, தற்போது, 75 ஆண்டுகளாகிறது. பார்லிமென்டின், 75வது ஆண்டை முன்னிட்டு, ஐந்து நாள் சிறப்பு கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பல கட்சி எம்.பி.,க்களும், பார்லிமென்டுக்கு பிரியாவிடை கொடுத்து, அதன் பெருமைகளை, தங்கள் அனுபவங்களை பேசினர். கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று முதல், பார்லிமென்ட் புதிய வளாகத்தில் செயல்பட உள்ளது.
குண்டுகள் வீசினர்
பார்லிமென்டின், 75 ஆண்டு பயணம் தொடர்பாக நடந்த விவாதத்தை நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த கட்டடத்துக்கு நாம் பிரியாவிடை கொடுக்கும் இந்தத் தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. புதிய கட்டடத்துக்கு நாம் செல்லும்போது, பல நினைவுகளை, உணர்வுகளை சுமந்து செல்ல உள்ளோம்.
நாட்டின் சுதந்திரத்தின்போது, பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்கள், இந்த பார்லிமென்டின் மீது குண்டுகளை வீசினர். அது ஆங்கிலேயர்களை துாக்கத்தில் இருந்து விழிப்படைய செய்தது. அவர்கள் அன்று வீசிய குண்டுகளின் வாயிலாக ஏற்பட்ட சுதந்திர தாக்கம், தற்போதும் நம் மனதில் நிழலாடுகிறது.
இதே பார்லிமென்டில், 2001ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது எம்.பி.,க்களை பாதுகாப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் தங்கள் உயிரைத் தியாகம்
தொடர்ச்சி 7ம் பக்கம்
பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், செய்தியாளர் களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, ஜி - 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது, விஸ்வகர்மா திட்டம் அறிமுகம், யஷோபூமி என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது என, கடந்த சில வாரங்களாக பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இவை மக்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மனம் முழுதும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுதும் புதிய நம்பிக்கை, உத்வேகம் ஆகியவற்றுடன், கொண்டாட்டம் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர்.இந்த நேரத்தில் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நடக்கிறது; இது மிகவும் குறுகிய கால கூட்டத் தொடராக இருந்தாலும், இதன் முக்கியத்துவம் மிகப் பெரியது. மேலும், பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.பார்லிமென்டின், 75 ஆண்டு கால பயணம், இந்தக் கட்டடத்தில் முடிந்து, புதிய கட்டடத்தில் துவங்க உள்ளது. வரும், 2047ல் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக விளங்குவதற்கான புதிய திட்டங்கள், முடிவுகள், புதிய கட்டடத்தில் எடுக்கப்பட உள்ளன.விநாயகர் சதுர்த்தி தினத்தில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் கூட்டம் நடக்க உள்ளது. தடைகளை விலக்குபவர் விநாயகர். அவரது அருளால், நாட்டின் வளர்ச்சிக்கு எந்த தடையும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி,ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எம்.பி.,க்கள் நேற்று பிரியாவிடை கொடுத்தனர். பார்லிமென்ட் சிறப்பு
மூலக்கதை
