விஜய்யின் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது

தினமலர்  தினமலர்
விஜய்யின் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற விருது விழாவில் இன்று முதல் லியோ படத்தின் ப்ரொமோஷன் பணி தொடங்கப்பட்டு விட்டது என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். தான் சொன்னது போலவே தற்போது லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், ஸ்டைலிசான லுக்கில் விஜய் காணப்படுகிறார். இப்படி தெலுங்கு பதிப்பு போஸ்டரை தற்போது வெளியிட்டு இருக்கும் லோகேஷ் கனகராஜ், இதேபோன்று லியோ படம் வெளியாக உள்ள அனைத்து மொழிகளுக்கும் விஜய்யின் வெவ்வேறு ஸ்டைலிசான போஸ்டர்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம். இந்த லியோ தெலுங்கு போஸ்டர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை