போடி --சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும்

  தினமலர்
போடி சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும்

தேனி, - போடி -சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும்

ரயில் சேவை துவக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

அரண்மனைப்புதார் திருமலை நகரில் உள்ள மண்டபத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமை வகித்தார். செயலாளர் தாஜூதீன்,

பொருளாளர் முத்துக்குமார், இணைச் செயலாளர்கள் அழகுராஜூ, விஸ்வன், மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, பொதுச்செயலாளர் செல்வம்,

மாவட்ட மகளிர்

துணைக்குழு அமைப்பாளர் லட்சுமி, துணைத்தலைர்கள் ராஜேந்திரன், தமிழ் பரமன்,

ராமகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் தாமோதரன், அனைத்து துறை

ஓய்வூதியர் சங்க மாவட்ட

செயலாளர் முருகேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்லதுரை

உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் போடி- சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும்.

போடியில் இருந்து மாநிலத்தின் பிற

பகுதிகளுக்கு ரயில்

சேவை துவங்க வேண்டும். திண்டுக்கல்- லோயர்கேம்ப் ரயில் பாதை திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு நிர்பந்திக்க வேண்டும்.

வைகை அணை நீர் பிடிப்பு பகுதியை துார்வார வேண்டும்.

மதுரை கம்பம் பைபாஸ் அமைக்க வேண்டும். அரசுத்துறைகளில் ஊழியர்களை குறைக்கும்

போக்கினை கைவிட வேண்டும். வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் நடத்தும் முறையை தவிர்க்க

வேண்டும் உள்ளிட்ட

10 தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன.

தேனி, - போடி -சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரயில் சேவை துவக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

மூலக்கதை