மெல்லிய கவசத்தின் வலுவான பாதுகாப்பு: ஓசோன் எனும் அறிவியல் விந்தை

தினமலர்  தினமலர்
மெல்லிய கவசத்தின் வலுவான பாதுகாப்பு: ஓசோன் எனும் அறிவியல் விந்தை

ஓசோன் என்பது, வளிமண்டலத்தில் உள்ள ஒரு மிக மெல்லிய படலம்; இது, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூரியனின் புற ஊதா ஒளி வீச்சை, 93 முதல், 99 சதவீதம் வரை உட்கிரகித்து, அதன் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கிறது.

'தினசரி பயன் படுத்தும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் வெளிவரும் புகை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்ஸைடு ஆகியவை தான் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் அச்சுறுத்தல்கள்' என்கிறது அறிவியல்.

சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக பூமியை வந்தடைவதால் புவி வெப்பமடைவது, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது; இதை எதிர்கொள்ளவே மனித இனம் திண்டாடி வரும் நிலையில், மனிதர் களுக்கு கண்பார்வை குறைபாடு, தோல் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஓசோன் படலத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என, அறிவியலாளர்கள் அறைகூவல் விடுத்து வருகின்றனர்.

இதை உணர்த்தும் விதமாக தான், ஒவ்வொரு ஆண்டும், செப்., 16ல், உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டின் ஓசோன் பாதுகாப்பு தின மையக் கருத்தாக, 'ஓசோன் படலத்தை சரி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை குறைத்தல்' என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஓசோன் என்பது, வளிமண்டலத்தில் உள்ள ஒரு மிக மெல்லிய படலம்; இது, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூரியனின் புற ஊதா ஒளி வீச்சை, 93 முதல், 99 சதவீதம் வரை உட்கிரகித்து, அதன் பாதிப்பில் இருந்து

மூலக்கதை