ஐம்பொன் அம்மன் சிலை வயலில் இருந்து மீட்பு

தினமலர்  தினமலர்
ஐம்பொன் அம்மன் சிலை வயலில் இருந்து மீட்பு

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாண்டுகுடியைச் சேர்ந்த அயோத்தி ராமனுக்கு சொந்தமான வயல் சேமன்வயல் கிராமத்தில் உள்ளது. வயலில் நேற்று காலை, 10:00 மணிக்கு சுத்தம் செய்யும் பணி நடந்தது. பெண்கள் நிலத்தில் உள்ள செடிகளை அகற்றிய போது, அம்மன் சிலை புதைந்திருப்பதை பார்த்து தேளூர் ஊராட்சி தலைவர் அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். திருவாடானை வருவாய்த்துறையினர் சிலையை மீட்டனர். அந்த சிலை 2 அடி உயரம், 10 கிலோ எடையில், ஐம்பொன்னில் இருந்தது.

''பிற்கால பாண்டியர் கால 12 - 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சக்தி சிலை இது,'' என, தஞ்சாவூர் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை பேராசிரியர் ராஜவேலு கூறினார். மீட்கப்பட்ட சிலை, திருவாடானை சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாண்டுகுடியைச் சேர்ந்த அயோத்தி ராமனுக்கு சொந்தமான வயல் சேமன்வயல் கிராமத்தில் உள்ளது. வயலில் நேற்று காலை, 10:00 மணிக்கு சுத்தம் செய்யும்

மூலக்கதை