வீடு தேடி மருத்துவம் பார்க்கும் சந்திரயான் திட்டம் துவக்க விழா

தினமலர்  தினமலர்
வீடு தேடி மருத்துவம் பார்க்கும் சந்திரயான் திட்டம் துவக்க விழா



புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு தேடி சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் சந்திரயான் திட்டம் துவக்க விழா நடந்தது.

சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் ஆயுஷ்மான் பவா என்ற திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு காணொளி மூலம் நேற்று துவக்கி வைத்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவிய காணொளி மூலம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கம்பன் கலையரங்கில் இருந்து காணொளி வழியாக கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை சார்பில் சந்திரயான் எனப்படும் ஆரோக்கியத்தை நோக்கி என்ற திட்டம் துவக்க விழா நடந்தது.

கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, பாஸ்கர், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், தலைமை செயலர் ராஜிவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் ஸ்ரீராமலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சந்திரயான் திட்டம்



மக்கள் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் சிகிச்சை பெறும் மருத்துவ குறிப்புகளை பத்திரப்படுத்துவதில்லை. இதனால் அடுத்த முறை டாக்டரிடம் செல்லும்போது அவர்களின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் தெரியாமல் மீணடும் பல பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதனை தவிர்க்க, மருத்துவ குறிப்புகளை பத்திரப்படுத்தி வைக்கும் வகையில், அனைவருக்கும் 14 எண் கொண்ட சுகாதார அட்டை வழங்கப்பட உள்ளது.

இதனை சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ குழுவினர் வீட்டிற்கு நேரடியாக சென்று சில கேள்விகள் கேட்டு, ரத்த சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை, எடை, உயரம், பரிசோதனை செய்வர்.தொடர்ந்து காசநோய், உடல் பருமன், மகப்பேறு, குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்ற வளர்ச்சி பரிசோதனை செய்யப்படும்.

மேலும் இலவச காப்பீடு திட்டத்தில் சிவப்பு ரேஷன் கார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் செப். 17 முதல் அக். 31 வரை செயல்படுத்தப்பட உள்ளது.

விருது வழங்கல்



மரக்காணத்தை சேர்ந்த ஞானசேகர், சத்யா தம்பதி மகன் சாம்பசிவம். 7ம் வகுப்பு படித்த மாணவர் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுவனின் சிறுநீரகம், கல்லீரல், கருவிழி, சிறுகுடல் தானமாக கொடுக்கப்பட்டது.

இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. இதற்காக சிறுவனின் தந்தை ஞானசேகருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 150க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்த டாக்டர்கள் ஜாஸ்மின்,அனந்தலட்சுமிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏனாமில் உள்ள அனைத்து காசநோயாளிகளை தத்தெடுத்துள்ள கொல்லப்பள்ளி சீனிவாஸ்க்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரகுநாதன், டாக்டர் துரைசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு தேடி சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் சந்திரயான் திட்டம் துவக்க விழா நடந்தது.சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மக்கள்

மூலக்கதை