குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஜய் பட நடிகை

  தினத்தந்தி
குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஜய் பட நடிகை

சென்னை,தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.சமீபத்தில் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி தனது குடும்பத்தினருடன் திருப்பது ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

மூலக்கதை